Site icon Treasure Hymns – Tamil

பாடல் 218 பாடல் வரிகள்

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 218 பாடல் வரிகள்

 

சிலுவைக் கொடி பிடித்து
சிறுவரே நாம் சென்றிடுவோம்

1. உலகினி லெங்கும் சென்று
ஓசன்னா கீதம்பாடி
ஊழியம் நாம் செய்திடுவோம்
ஊக்கமாக இயேசுவுக்கு -சிலுவை

2. நன்மை நிறை இயேசுவின்கை
நாம்செல்லும் பாதைகாட்டும்
நம்பியே நாம் ஏகுவோமே,
நமது பெலன் இயேசு தாமே – சிலுவை

3. சோதனைகள் வந்திடினும்
சோராமல் முயன்றிடுவோம்
நாதன் இயேசு கைவிடாமல்
நம்மை நித்தம் தாங்குவாரே – சிலுவை

4. கெட்டோரை இயேசுவிடம்
கூட்டியே நாம் சேர்த்திடுவோம்
மட்டில்லா இயேசு அன்பை
மானிடர்க்குப் பகிர்ந்திடுவோம் – சிலுவை

Exit mobile version