Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 216 பாடல் வரிகள்
கெம்பீரமாகவே சங்கீதம் பாடுவோம்
நம்பாரமே எந்நாலும
நீக்குவோனை நாடுவோம்
1. மங்காத தீபமாய்
விளங்கும் மா வசனமே
சிங்காரமா யித்தீபம்
நாடிச் சேர்ந்ததினமே
2. படாமுடிக் கொடூரனைப்
பதைக்கவே கொல
குடாரமாக வெய்ததேவ
வேதமே வெல
3. எக்காளமே தொனித்திடப்
பொல்லாப் புரிவிழ
முக்காலமும் திரியேகரை
முதன்மையாய்த் தொழ
4. ஜீவாதிபற் கெலா
மகத்வமே சிறந்திடத்
தேவாதி தேவன்
யேசுவென் றெலாமறிந்திட
5. அகோரப்பேய் நடுங்கியோட
யாமகிழ்ந்திட மகாமகத்வன் யேசுவென்
றெலாம் புகழ்ந்திட