Site icon Treasure Hymns – Tamil

பாடல் 212 பாடல் வரிகள்

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 212 பாடல் வரிகள்

 

திருமகனார் உவந்தளித்த,
திருவிருந்தை யருந்திடுவோம்
மரியுதல்வன் சடலமிது,
மானிடரே மனத்திலெண்ணும்

1. அன்புடனே புதுப்
பஷாவை ஆசரிக்க வாருமையா
இன்றே பாவ நித்திரையை
விட்டெழுந்தே சேருமையா

2. சற்குருவாய், சுவாமியுமாய்,
சிநேகனுமாய், சொந்தமுமாய்
விற்பன்னரும் சஞ்சரித்து
வீணருக்காய்க் குருசில் நொந்து

3. அன்றொருநாள் சீடருடன்
அச்சயனும் வீற்றிருந்து
பண்டிகைபோல் நள்ளிரவில்
பாகம் செய்த திருவிருந்து

4. ஜென்ம கர்ம பவப்பிணியைத்
தீர்த்து வைக்கும் குருமருந்து
நன்மைதரும் ஜீவநதி
நாடிச்செல்வோ மிதிலிருந்து

5. அருவருத்தே பழம்
பகையை அடியோடே
அகற்றிவிட்டுக் கிறிஸ்து பெருமானை
மன திருத்தியவர்
சிலுவைதொட்டு

6. சன்மார்க்க நெறியடுத்துச்
சற்குணத்தைக் கைப்பிடித்து
என்னாளு மிதை ஸ்திரமாய்
இருத்திவைக்க இடங்கொடுத்து

Exit mobile version