Site icon Treasure Hymns – Tamil

பாடல் 211 பாடல் வரிகள்

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 211 பாடல் வரிகள்

 

கர்த்தரின் பந்தியில்
வா. – சகோதரா
கர்த்தரின் பந்தியில் வா.

கர்த்தர் அன்பாய்ச் சொந்த
ரத்தத்தைச் சிந்தின
காரணத்தை மனப்
பூரணமாய் எண்ணி – கர்த்தரின்

1. ஜீவ அப்பம் அல்லோ?
கிறிஸ்துவின் திருச் சரீரம் அல்லோ?
பாவமனங் கல்லோ?
உனக்காய்ப் பகிரப்பட்ட தல்லோ?
தேவ குமாரனின் ஜீவ
அப்பத்தை நீ
தின்று அவருடன்
என்றும் பிழைத்திட – கர்த்தரின்

2. தேவ அன்பைப் பாரு
கிறிஸ்துவின் சீஷர் குறை தீரு.
பாவக் கேட்டைக் கூறு
ராப்போசன பந்திதனில் சேரு.
சாவுக்குரிய மா பாவமுள்ள லோகம்
தன்னில் மனம் வைத்து
அன்னியன் ஆகாதே – கர்த்தரின்

3. அன்பின் விருந்தாமே
கர்த்தருடன் ஐக்யப் பந்தி யாமே
துன்பம் துயர் போமே
இருதயம் சுத்த திடனாமே.
இன்பம் மிகும் தேவ
அன்பின் விருந்துக்கு
ஏது தாமதமும்
இல்லாதிப்போதே வா – கர்த்தரின்

Exit mobile version