Site icon Treasure Hymns – Tamil

பாடல் 210 பாடல் வரிகள்

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 210 பாடல் வரிகள்

 

அன்பரின் நேசம்
ஆர் சொல்லலாகும்? அதிசய
அன்பரின் நேசம்
ஆர் சொல்லலாகும்?

துன்ப அகோரம்
தொடர்ந்திடும் நேரம் – அதிசய

1. இதுவென் சரீரம்
இதுவென்றன் ரத்தம்
என்னை நினைந்திடும்படி
அருந்து மென்றாரே – அதிசய

2. பிரிந்திடும் வேளை
நெருங்கினதாலே வருந்தின
சீஷர்க்காய் மறுகி
நின்றாரே – அதிசய

3. வியாழனிரவினில்
வியாகுலத்தோடே
விளம்பின போதகம்
மறந்திடலாமோ? – அதிசய

4. செடியும் கொடியும்
போல் சேர்ந்து தம்மோடே
முடிவு பரியந்தம்
நிலைப்பீரென்றாரே – அதிசய

5. பக்தர் கட்காகப்
பரமனை நோக்கி
மெத்தவும் ஊக்கமாய்
வேண்டிக் கொண்டாரே – அதிசய

Exit mobile version