Site icon Treasure Hymns – Tamil

பாடல் 205 பாடல் வரிகள்

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 205 பாடல் வரிகள்

 

என்னசுகம்! ஆகா என்னசுகம்! – என்
ரட்சகரின் சமுகம் பேரானந்தம் – பர
மானந்த மோட்ச சுகானந்தம் – அதைப்
பெற்று அனுபவித்தால், என்னசுகம்!

1. பொன்னகர் வீதியில் எந்நேரம் பாடலாம்
கிண்ணரம் தம்புர்வீணை இன்னோசை கேட்கலாம் -என்ன

2. தங்கக்கிரீடம் தலையில் தரிக்கலாம்
சிங்காசனத்தில் சொகுசாயிருக்கலாம் -என்ன

3. ஜீவநதியில் குளித்துக் களிக்கலாம்
ஜீவ விருட்சக் கனியும் புசிக்கலாம் -என்ன

4. வெற்றிபொன் வெண்ணங்கி தரித்துக் கொள்ளலாம்,
சுத்தப் பொன்னால் செய்த வீதியிலுலாவலாம்

5. கர்த்தரோ டெப்போதும் ஜீவித்து வாழலாம்
அத்தனின் சமூகம் தரிசித்து ஆளலாம் – என்ன

6.வாட்டம், பசி, தாகம், பட்டினிச்சாவில்லை
கேட்டின் மனுடர்வந்து கிட்டஇருப்பதில்லை -என்ன

7. மேசியா நித்தமும் மேய்த்து நடத்துவார்
ஆசீர்வதித்து அரவணைத்துக் கொள்ளுவார் -என்ன

8. இயேசுவின் ரத்தத்தால் மீட்பை அடைந்தவர்
ஆசனமீதிருந்து ஜெயகிதம் பாடுவார்- என்ன

Exit mobile version