Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 203 பாடல் வரிகள்
அழகாய் நிற்கும் யார் இவர்கள்?
திரளாய் நிற்கும் யார் இவர்கள்?
சேனைத்தலைவராம் இயேசுவின் பொற்தளத்தில்
அழகாய் நிற்கும் யார் இவர்கள்?
1. ஒரு தாலந்தோ இரண்டு தாலந்தோ
ஐந்து தாலந்தோ உபயோகித்தோர்
சிறிதானதோ பெரிதானதோ
பெற்றபணியை செய்து முடித்தோர் -அழகாய்
2.காடு மேடு கடந்து சென்று
கர்த்தர் அன்பைப் பகிர்ந்தவர்கள்
உயர்வினிலும் தாழ்வினிலும்
ஊக்கமாகவே ஜெபித்தவர்கள் -அழகாய்
3. தனிமையிலும் வறுமையிலும்
லாசரு போன்று நின்றவர்கள்
யாசித்தாலும் போஷித்தாலும்
விசுவாசத்தைக் காத்தவர்கள் -அழகாய்
4. ஒன்றே ஒன்று என் வாஞ்சையாம்
அழகாய் நிற்போர் வரிசையில் நான்
ஓர் நாளினில் நின்றிடவும்
இயேசு தேவா அருள் புரியும் -அழகாய்
5. தூயத் தந்தையே, தாய இயேசுவே
தூய ஆவியே துதி தோத்திரம்!
கனம், மகிமை, பெலன், வல்லமை,
என்றென்றைக்குமே உம்முடையதே! -அழகாய்