Site icon Treasure Hymns – Tamil

பாடல் 196 பாடல் வரிகள்

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 196 பாடல் வரிகள்

 

மணவாழ்வு புவிவாழ்வினில் வாழ்வு,
மங்கள வாழ்வு, வாழ்வினில் வாழ்வு
மணவாழ்வு புவிவாழ்வினில் வாழ்வு,
மருவிய சோபன சுப வாழ்வு.

1. துணைபிரியாது, தோகை இம்மாது
சுபமண மக்கள் இவர் இதுபோது
மணமுறை ஓது வானம் விடாது,
வந்தனர் உமதருள் பெற ஏது, நல்ல -மணவாழ்வு

2. ஜீவதயாகரா, சிருட்டியதிகாரா,
தெய்வீக மாமண அலங்காரா,
தேவகுமாரா, திருவெல்லையூரா,
சேர்ந்தவர்க் கருள் தரா திருப்பீரா, நல்ல -மணவாழ்வு

3. குடித்தன வீரம் குணமுள்ள தாரம்,
கொடுத்துக் கொண்டாலது சமுசாரம்,
அடக்கம் ஆசாரம், அன்பினா தாரம்
அம்புவி தனில் மனைக் கலங்காரம், நல்ல- மணவாழ்வு

Exit mobile version