Site icon Treasure Hymns – Tamil

பாடல் 194 பாடல் வரிகள்

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 194 பாடல் வரிகள்

 

இயேசுநாயகா, வந்தாளும்;-எந்நாளும், திவ்ய
இயேசுநாயகா, வந்தாளும்.

ஆசீர்வாதமாக இந்த நேச மணமே நன்றாக. – இயேசு

1. சுந்தரம் மிகும்படி முன் அந்த மணவீட்டில்
உந்தன் அருள் தந்த தயை போல, அன்பாலே – இயேசு

2. உத்தம சன்மார்க்க நெறி, பக்தி, விசுவாசம்,
நித்திய சமாதானம் உற்று, வாழ, மிக வாழ. – இயேசு

3. துங்கம் மிகு நன் கனம் விளங்கி, வளமாக
மங்களம தோங்க, நலம் தாங்க, நலம் தாங்க. – இயேசு

4. நித்திய சுபசோபனமோ டெத்திசையினும் பெருகிப்
புத்திர சந்தானமே செழிக்கத், தழைக்க. – இயேசு

Exit mobile version