Site icon Treasure Hymns – Tamil

பாடல் 187 பாடல் வரிகள்

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 187 பாடல் வரிகள்

 

நான் பிரம்மித்து நின்று பேரன்பின்
பிரவாகத்தை நோக்கிப் பார்த்தேன்
என் உள்ளத்தில் மெய்ச் சமாதானம்
சம்பூரணமாய் அடைந்தேன்

மா தூய உதிரத்தால்
என் பாவம் நீங்கக் கண்டேன்
இயேசையரின் இரட்சிப்பினால்
நான் ஆறுதல் கண்டடைந்தேன்

1. முன்னாளில் இவ்வாறுதல் காண
ஓயாமல் பிரயாசப்பட்டேன்
வீண் முயற்சி நீங்கின போதோ
என் மீட்பரால் அருள் பெற்றேன் — மாதூய

2. தம் கரத்தை என் மீதில் வைத்து
நீ சொஸ்தமாவாய் என்றனர்;
நான் அவரின் வஸ்திரம் தொட
ஆரோக்கியம் அருளினார் — மாதூய

3.எந்நேரமும் புண்ணிய நாதர்
என் பக்கத்தில் விளங்குவார்
தம் முகத்தின் அருள் பிரகாசம்
என் பேரிலே வீசச் செய்வார் — மாதூய

Exit mobile version