Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 185 பாடல் வரிகள்
எந்தன் நாவில் புதுப்பாட்டு
எந்தன் இயேசு தருகிறார்!
ஆனந்தம் கொள்ளுவேன், அவரை நான் பாடுவேன்
உயிருள்ள நாள் வரையில் – அல்லேலூயா
1. பாவ இருள் என்னைவந்து சூழ்ந்துகொள்கையில்,
தேவனவர் தீபமாய் என்னைத் தேற்றினார்! -ஆனந்தம்
2. சேற்றிலிருந் தென்னை அவர் தூக்கியெடுத்தார்,
நாற்றமெல்லாம் ஜீவரத்தம் கொண்டு மாற்றினார்! -ஆனந்தம்
3. வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார்!
பாதை காட்டி, துன்பமெல்லாம் நீக்கி மீட்டிட்டார்! -ஆனந்தம்
4. தந்தை, தாயும், நண்பர், உற்றார் யாவுமாகினார்,
நிந்தைதாங்கி எங்குமவர் மேன்மை கூறுவேன்! -ஆனந்தம்
5. இவ்வுலகப் பாடு என்னை என்ன செய்திடும்?
அவ்வுலக வாழ்வைக்காணக் காத்துநிற்கிறேன்! – ஆனந்தம்