Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 175 பாடல் வரிகள்
எத்தனை திரள் என் பாவம், என் தேவனே!
எளியன்மேல் இரங்கையனே
நித்தம் என் இருதயம் தீயதென் பரனே;
நிலைவரம் எனில் இல்லை; நீ என் தாபரமே — எத்தனை
1. பத்தம் உன் மேல் எனக்கில்லை
என்பேனோ பணிந்திடல் ஒழிவேனோ?
சுத்தமுறுங் கரம்கால்கள், விலாவினில்
தோன்றுது காயங்கள், தூய சிநேகா ! — எத்தனை
2. என்றன் அநீதிகள் என் கண்கள் முனமே
இடைவிடாதிருக்கையிலே,
உன்றன் மிகுங் கிருபை, ஓ மிகவும் பெரிதே
உத்தம மனமுடையோய், எனை ஆளும் ! — எத்தனை
3. ஆயங் கொள்வோன்போல், பாவ ஸ்திரீபோல்
அருகிலிருந்த கள்ளன் போல்,
நேயமாய் உன் சரண் என் வணங்கினேன்
நீ எனக்காகவே மரித்தனை, பரனே ! — எத்தனை
4. கெட்ட மகன்போல் துட்டனாய் அலைந்தேன்
கெடு பஞ்சத்தால் நலிந்தேன்;
இட்டமாய் மகன் எனப் பாத்திரன் அவன் நான்
எனை ரட்சித்திடல் உன்றன் நிமித்தமே, அப்பனே ! — எத்தனை