Site icon Treasure Hymns – Tamil

பாடல் 171 பாடல் வரிகள்

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 171 பாடல் வரிகள்

 

வருவாய்! தருணமிதுவே அழைக்கிறாரே,
வல்ல ஆண்டவர் இயேசுவண்டை

1. வாழ்நாளை யெல்லாம் வீண்நாளாய் வருத்தத்தோடே
கழிப்பது ஏன்? வந்தவர் பாதம் சரணடைந்தால்,
வாழ்வித்து உன்னைச் சேர்த்துக்கொள்வார். – வருவாய்

2. வானத்தின் கீழே பூமி மேலே
வானவர் இயேசு நாமம் அல்லால்
இரட்சிப்படைய வழியில்லையே,
இரட்சகர் இயேசு – வழி அவரே! – வருவாய்

3. தீராத பாவம் வியாதியையும்
மாறாத உந்தன் பெலவீனமும்,
கோரக் குருசில் சுமந்து தீர்த்தார்,
காயங்களால் நீ குணமடைய! -வருவாய்

4. சத்திய வாக்கை நம்பியே வா,
நித்திய ஜீவன் உனக்களிப்பார்;
உன்பேரை ஜீவ புத்தகத்தில்
உண்மையாய் இன்றே எழுதிடுவார்! -வருவாய்

Exit mobile version