Site icon Treasure Hymns – Tamil

பாடல் 168 பாடல் வரிகள்

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 168 பாடல் வரிகள்

 

தருமம் செய்ய நிருபந் தனில்
சாற்றுதே பாரும் சாற்றுதே பாரும் – வேதம் தூற்றுதே’ கேளும்.

1. தசம பாகம் தருவோருக்கு – தற்பரன் ஈவார்,
தற்பரன் ஈவார் – ஆசீர் தாராளமாய் ஈவார்.

2.சோதித்துப் பார்என்னை என்றுதேவன் சொன்னாரே”,
தேவன் சொன்னாரே – என்றும் வேதம் சொல்லுதே!

3. வாங்குவதைப் பார்க்கிலும் கொடுப்பதே பாக்யம்
கொடுப்பதே பாக்யம் – பேர் எடுப்பதே யோக்யம்.

4. இரண்டு காசு போட்ட ஏழை விதவையைப் பாரு
விதவையைப் பாரு – இயேசு வியந்ததைக் கேளு

5. விசனமாய்க் கட்டாயமாய் தருமம்செய்யாதே,
பலனும் செய்யாதே ஒருபலனும் செய்யாதே.

6. அனனியா சப்பீராள் போல் ஆகவேண்டாம் நீ,
ஆகவேண்டாம் நீ, அப்படிப் போகவேண்டாம் நீ.

Exit mobile version