Site icon Treasure Hymns – Tamil

பாடல் 167 பாடல் வரிகள்

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 167 பாடல் வரிகள்

 

அன்பே பிரதானம், சகோதர
அன்பே பிரதானம்.

1. பண்புறு ஞானம், – பரம நம்பிக்கை
இன்ப விஸ்வாசம், – இவைகளி லெல்லாம் -அன்பே

2. பலபல பாஷை – படித்தறிந் தாலும்,
கலகல வென்னும் – கைம்மணி யாமே -அன்பே

3. என் பொருள் யாவும் – ஈந்தளித் தாலும்,
அன்பில்லை யானால் – அதில் பயனில்லை -அன்பே

4. துணிவுட னுடலைச் – சுடக்கொடுத் தாலும்
பணியஅன் பில்லால் – பயனதி லில்லை – அன்பே

5. சாந்தமும் தயவும் – சகல நற்குணமும்,
போந்த’ சத்தியமும், பொறுமையுமுள்ள – அன்பே

6. புகழிறு மாப்பு – பொழிவு பொறாமை,
பகை, நியாயப் – பாவமுஞ் செய்யா -அன்பே

7. சினமடை யாது, – தீங்குமுன் னாது,
தினமழி யாது, – தீமைசெய் யாது -அன்பே

8. சகலமும் தாங்கும் – சகலமும் நம்பும்,
மிகைபட வென்றும் -மேன்மைபெற் றோங்கும் -அன்பே

Exit mobile version