Site icon Treasure Hymns – Tamil

பாடல் 165 பாடல் வரிகள்

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 165 பாடல் வரிகள்

 

ஆ! இன்ப கால மல்லோ-ஜெபவேளை
ஆனந்த காலமல்லோ

பூவின் கவலைகள் போக்கி என் ஆசையைப்
பொன்னுல காதிபன் முன்னே கொண்டேகிடும். – ஆ!

1. துன்பம் துயர் நீக்கி,-பொல்லாங்கனின்
சோதனைகள் போக்கி,
அம்பர வாசிகளோ-டிதயத்தை
இன்ப உறவாக்கி,
கெம்பீரமாகவே தம்பிரான் ஆசனம்
கிட்டி மகிழ்வுடனுற்று வரச் செய்யும். – ஆ!

2. ஜீவ ஆறுதல் பெற்று,-பிஸ்காவின்
சிகரமதனில் உற்று,
தேவ நகர் கண்ணுற்றுச்-சடலத்தை
ஜெகத்தில் எறிந்துவிட்டு,
ஆவி களிப்புடன் ஆகாயஞ் செல்லவே,
அன்போடு பார்த்து நல் வந்தனஞ் சொல்லுவேன். – ஆ!

Exit mobile version