Site icon Treasure Hymns – Tamil

பாடல் 158 பாடல் வரிகள்

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 158 பாடல் வரிகள்

 

1. ஆயிரம் ஆயிரம் பாடல்களை
ஆவியில் நிறைந்தே பாடுங்களேன்
யாவரும் தேமொழிப் பாடல்களால்
இயேசுவைப் பாடிட வாருங்களேன்

அல்லேலூயா ! அல்லேலூயா !
என்றெல்லாரும் பாடிடுவோம்
அல்லலில்லை ! அல்லலில்லை !
ஆனந்தமாய்ப் பாடிடுவோம்

2. புதிய புதிய பாடல்களைப்
உள்ளம் கனிந்து நாம் பாடிடுவோம்
துதிகள் நிறைந்த ராகங்களால்
தூய தேவனைப் போற்றிடுவோம்.

3. நெஞ்சின் ஆவியின் ஆழங்களில்
நன்றி கூறும் கீதங்களால்
மிஞ்சும் ஓசைத் தாளங்கலால்
மீண்டும் பரவசம் கூடுங்களேன்

4. எந்த நாளும் காலங்களும்
இறைவனைப் போற்றும் நேரங்களே
சிந்தைகளுருகும் ராகங்களால்
சீயோனின் கீதம் பாடிடுவோம்

Exit mobile version