Site icon Treasure Hymns – Tamil

பாடல் 156 பாடல் வரிகள்

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 156 பாடல் வரிகள்

 

1. போற்றித் துதிப்போம், எம்தேவ தேவனைப்
புனித இதயமுடனே
நேற்றும்,இன்றும், என்றும் மாறா இயேசுவை நாம்
என்றும் பாடித் துதிப்போம்.

இயேசு என்னும் நாமமே – என்
ஆத்துமாவின் கீதமே – என்
நேசரேசுவை நான் என்றும்
ஏத்தி மகிழ்ந்திடுவேன்.

2. கோர பயங்கரமான புயலில்
கொடிய அலையின் மத்தியில்
காக்கும் கரங் கொண்டு மார்பில் சேர்த்தணைத்த
அன்பை என்றும் பாடுவேன். -இயேசு

3. யோர்தான் நதிபோன்ற சோதனையிலும்
சோர்ந்தமிழ்ந்து மாளாதே
ஆர்க்கும் ஜெயதொனியோடு பாதுகாத்த
அன்பை என்றும் பாடுவேன். -இயேசு

4. தாய் தன் பாலகனையே மறப்பினும்
நான் மறவேன் என்று சொன்னதால்,
தாழ்த்தி என்னையவர் கையில் தந்து, ஜீவ
பாதை என்றும் ஓடுவேன். -இயேசு

5. பூமிமுழுவதும் சாட்சியாகவே
போங்களென்ற கட்டளையதால்
ஆவி, ஆத்துமா என் தேகம் யாவுமீந்து
அன்புத் தொண்டு செய்குவேன். -இயேசு

Exit mobile version