Site icon Treasure Hymns – Tamil

பாடல் 155 பாடல் வரிகள்

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 155 பாடல் வரிகள்

 

1. எண்ணிலடங்காத் தோத்திரம், தேவா,
என்றென்றும் நான் பாடுவேன்
இந்நாள் வரை என் வாழ்விலே
நீர் செய்த நன்மைக்கே! -ஆஹா, எண்ணில்

2. வானாதி வானங்கள் யாவும்,
அதன் கீழுள்ள ஆகாயமும் பூமியில்
காண்கின்ற யாவும், கர்த்தா,
உம்மைப் போற்றுதே! -ஆஹா, எண்ணில்

3. காட்டினில் வாழ்கின்ற யாவும்,
கடும் காற்றும், பனித்தூறலும்
பூமியில் வாழ்கின்ற யாவும், கர்த்தா
உம்மைப் போற்றுதே! – ஆஹா, எண்ணில்

4. வால வயதுள்ளோர்களும்,
பெரும் வயதால் முதிர்ந்தோர்களும்
பாலகர் தம் வாயினாலும் பாடி
உம்மைப் போற்றுவார்! -ஆஹா, எண்ணில்

5. பாவத்தின் அடிமையாய்
நானும் தேவா, பார்மீது
வாழ்கையிலே பாதகனாம்
எந்தன் மீது, கர்த்தா,
பாசம் கொண்டீரே! – ஆஹா, எண்ணில்

Exit mobile version