Site icon Treasure Hymns – Tamil

பாடல் 154 பாடல் வரிகள்

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 154 பாடல் வரிகள்

 

1. வானமும் பூமியும் வகித்திடுந்தேவே!
வளம்நிறை ஆண்டவரே! தேவரீர்
ஈனராம் எம்மேல் இரங்கி இவ்வறுப்பை
ஈந்ததற்காய்த் தோத்ரம்!

2. பாவம்நிறைந்தோர், பாத்திமற்றோர்,
கோபத்துக்கேயுரியவர் வறியர்
ஆயினர் எமக்கிவ்வறுப்பை யளித்த
ஆண்டவரே, தோத்ரம்

3. வான மன்னாவை வருஷித் திஸ்ரேலை
வருடம் நாற்பது காத்தீர்!- அந்த
வல்லமை எமக்கிவ் வருடமுங்காட்டிய
வானவரே, தோத்ரம்

4. ஐந்தப்பங்கெண்டையாயிரம்பேரை
பந்தியில் போஷித்தீர்,-ஐயா!
போந்த எம்பசியும் புறமுறச்செய்தீர்,
புண்ணியரே, தோத்ரம்

5. பெரிய உம்நாமம் பேருலகோங்க்க,
வறியவர் மிடியகல,-இவ்வீவை
அறிவுடன் காத்தே அருகையாய் ஆளும்
நெறியெமக் கீந்தருள்வீர்

6. திருச்சபைப்பண்ணை திகழ்பயிர் நாங்கள்
தேவரீர் பயிர்க்காரர்,-திருவே
ஆவியின் மழையால் ஆக்கிடும்,எம்மை
அழகிய கதிர்மணியாய்!

Exit mobile version