Site icon Treasure Hymns – Tamil

பாடல் 153 பாடல் வரிகள்

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 153 பாடல் வரிகள்

 

அறுப்போ மிகுதி, ஆட்கள் தேவை,
அருளும்நாதனே, திவ்ய அருமைப்போதனே.

1. இந்து தேசம் எங்கும்ஒளி
எட்டிவீசவே, எங்கள் சபைகள் நீடவே-அறுப்போ

2. எமைப்புரந்த இயேசுநாமம்
எவருங்காணவே, இருள் அடங்கி நாணவே -அறுப்போ

3. வசன அமுதை வார்க்கும் நல்ல
வலவர் ஓங்கவே, மதிகேடு நீங்கவே -அறுப்போ

4.நாடு,நகரம், காடு, மேடு
நாடுமிடமெல்லாம் சபை பரவு மிடமெல்லாம்-அறுப்போ

5. போதகன்மார் ஆவியோடுன்
புகழை ஓதவே, மிகுபொய்யை மோதவே

6. எண்ணிலாத ஆத்துமாக்கள்
ஏங்கிநையுதே, மிகஇளைத்துத் தொய்யுதே -அறுப்போ

7. ஏழையடியார் மனுக்கிரங்கும்
எமையாட்கொண்டவா, நல்லவாக்கு விண்டவா – அறுப்போ

Exit mobile version