Site icon Treasure Hymns – Tamil

பாடல் 152 பாடல் வரிகள்

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 152 பாடல் வரிகள்

 

வாரும் எமது வறுமை நீக்க வாரும், தேவனே
மழை தாரும்,ஜீவனே

1. பாரில் மிகுக்கும் வருத்தத்தாலே பாடும் நீண்டதே;
வெகு கேடும் நீண்டதே

2. நட்ட பயிர்கள் மழை இல்லாமல் பட்டுப்போச்சுதே;
மிகக் கஷ்டம் ஆச்சுதே

3. பச்சைமரங்கள் கனிகள் இன்றிப் பாறிப்போச்சுதே;
அன்னம் பாறல் ஆச்சுதே

4. தரணியாவும் வெம்மையாலே ததும்புதே;ஐயா;
நரர் தயங்கிறோம் மெய்யாய்

5. கருணையுள்ள நாதனே,இத் தருணம் வாருமே;
எங்கள் தயங்கல் தீருமே

Exit mobile version