Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 150 பாடல் வரிகள்
ஐயா, உமது சித்தம் ஆகிடவே வேணும்,
மெய்யாய் எனது சித்தம் வெகுமோசமே காணும். – ஐயா
1. ஆடுபோல் வழிதப்பி
அவனவன் வழியொப்பிக்
கேடடைந்தோர் பாவத்தைக்
கிறிஸ்துமேல் சுமத்தினீர். – ஐயா
2. ஜீவனோ, மரணமோ,
செல்வமோ, வறுமையோ,
யாவிலெனை நிறுத்த
தேவரீர் நினைக்கினும். – ஐயா
3. வசை, இசை, பகை, நேசம்,
வாழ்வுயர் வதிமோசம்,
பசி, நிருவாணம், நாசம்,
பாடு, நோயடைகினும் – ஐயா
4. என்னிஷ்டம் வாய்க்காததால்
எத்தனை துயர்கொண்டேன்,
பொன்னடிக் கீழடங்கிப்
புகழுமக்கென்று வாழ்வேன். – ஐயா
5. குயவன்கைக் களிமண்ணாய்க்,
குருவே உமக்கமைவேன்,
நயமிது வென்றறிந்த
ஞானமுள்ள பிதாவே! – ஐயா