Site icon Treasure Hymns – Tamil

பாடல் 149 பாடல் வரிகள்

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 149 பாடல் வரிகள்

 

இரங்கும் இரங்கும் கருணைவாரி,
ஏசு ராசனே, – பவ – நாசநேசனே!

1. திரங்கொண்டாவி வரங்குண்டுய்யச்
சிறுமை பார் ஐயா, – ஏழை வறுமை தீர், ஐயா – இரங்கும்

2. அடியேன் பாவக் கடி விஷத்தால்
அயர்ந்து போகின்றேன், – மிகப் பயந்து சாகின்றேன் – இரங்கும்

3. தீமை அன்றி வாய்மை செய்யத்
தெரிகிலேன் ஐயா, – தெரிவைப் புரிகிலேன், ஐயா – இரங்கும்

4. பாவி ஏற்றும் கவி மன்றாட்டைப்
பரிந்து கேள் ஐயா, – தயை – புரிந்து மீள், ஐயா – இரங்கும்

Exit mobile version