Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 146 பாடல் வரிகள்
பரிசுத்தர், பரிசுத்தரே, இயேசையா
உம்மைப் பாடுவேன், பாடுவேன் நானே
கடைக்கண்ணால் பாரும் என்னைப்
படைத்த பராபரனே பரிசுத்தர் -பரிசுத்தர்
1. திசைஅறியாமல்தியங்கி, இயேசையா, சுவாமி
தெருக்களெல்லாம் அலைந்தேன் நான்
மனங்கசந்தழுகையில் மாளிகை காட்டினீரே -பரிசுத்தர்
2. பாவச்சுமைகள் சுமந்தேன், இயேசையா, சுவாமி
பாரினில் வெகுநாளாய் பாவி
நான் வந்தேன், எந்தன் பாரம் குறைத்துவிடும் -பரிசுத்தர்
3. கட்டுகளோடே வந்தேன் நான் இயேசையா, சுவாமி
திட்டிவாசல்திறவுமேன் பட்ட துயர் நினைத்தால் எட்டினதற்புதமே – பரிசுத்தர்
4. விரைவுடன் வழிநடக்க இயேசையா, சுவாமி உலகிடர் நடுவானேன்
எதிர்த்தால் இனிவிடுமோ, ஏகன் கிருபை தந்தால் – பரிசுத்தர்