Site icon Treasure Hymns – Tamil

பாடல் 144 பாடல் வரிகள்

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 144 பாடல் வரிகள்

 

என்னையும் உம தாட்டின் மந்தையோ
டேற்றுக் காத்திடும், இயேசுவே

1. வன்னியானதோர் அலகைப்பேய் தனை
வதைத்திட ஞான பலத்துடன் – சிறந்து
இந்நிலத்தினில் வந்துதித்த நல்
இயேசுவே, எனைச் சேர்த்திடும் -என்னையும்

2. ஐயிருபது ஆட்டினில் ஒன்று
அகன்றிட, மனம் உகந்துகோன், – அதை
மெய்யதாகவே தேடுவான் என்ற
மேய்ப்பரே, என்னைச் சேர்த்திடும்-என்னையும்

3. வாசலாகவே இருக்கிறேன், எனால்
வந்தவன் மனம் நொந்திடான், – வெகு
நேசமாகவே வாழ்வான் என்ற நல்
நிமலனே, எனைச் சேர்த்திடும் -என்னையும்

4. நல்ல மேய்ப்பன் நான் எனமொழிந்த
என் நாதனே, ஞானபோதனே, ஜீவ
புல்லுள்ள இடம்தன்னில் கொண்டெனைப்
போஷித்து முசிப்பாற்றிடும் -என்னையும்

5. மேய்ப்பராகவே இருக்கிறீர், எங்கள்
மேய்ச்சலும் நீர்தாமலோ – ஞான
வாய்ப்புள்ள சத்ய மறையில் மேய்ந்து நான்
வளர்ந்திட அருள் புரிந்திடும் -என்னையும்

6. அன்புடைய மெய் மேய்ப்பராயிருந்து
ஆட்டுக்காய் சொந்த ஜீவனை – வெகு
இன்பமாகவே ஈந்து மீட்ட நல்
இயேசுவே, எனைச் சேர்த்திடும் -என்னையும்

Exit mobile version