Site icon Treasure Hymns – Tamil

பாடல் 143 பாடல் வரிகள்

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 143 பாடல் வரிகள்

 

ஆதாரம் நீர் தான் ஐயா,என்துரையே,
ஆதாரம் நீர் தான் ஐயா.

சூதாம் உலகில் நான் தீதால் மயங்கையில்

1. மாதா பிதாவெனைத் தீதாய் மதிக்கையில்
மற்றோர்க்கு பற்றேதையா,எளியன் மேல்,
மற்றோர்க்கு பற்றேதையா, எளியனுக்கு –ஆதாரம்

2. நாம் நாம் துணையென நயந்துரை சொன்னவர்
நட்டாற்றில் விட்டாரையா; தனியனை
நட்டாற்றில் விட்டாரையா; தனியனுக்கு –ஆதாரம்

3.கற்றோர் பெருமையே மற்றோர் அருமையே,
வற்றா கிருபை நதியே ,என்பதியே ,
வற்றா கிருபை நதியே ; என்பதியே –ஆதாரம்

4. சோதனை யடர்ந்து வேதனை தொடர்ந்து
துக்கம் மிகுவேளையில், என் சுகிர்தமே,
துக்கம் மிகுவேளையில் உன் தாசனுக்கு –ஆதாரம்

Exit mobile version