Site icon Treasure Hymns – Tamil

பாடல் 140 பாடல் வரிகள்

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 140 பாடல் வரிகள்

 

உனக்கொத்தாசை வரும் நல் உயர் பருவதம்,-இதோ!

தினமும் மனது நொந்து சிந்தை கலங்குவோனே. – உன

1. வானம் புவி திரையும்
வகுத்த நன்மைப் பிதாவின்
மாட்சிமையின் கரமே வல்லமையுள்ள
தல்லோ? – உன

2. காலைத் தள்ளாடவொட்டார்,
கரத்தைத் தளரவொட்டார்;
மாலை உறங்கமாட்டார்,
மறதியாய்ப் போக மாட்டார். – உன

3. கர்த்தருனைக் காப்பவராம்,
கரமதில் சேர்ப்பவராம்;
நித்தியம் உந்தனுக்கு
நிழலாயிருப்பவராம். – உன

4. பகலில் வெயிலெனிலும்,
இரவில் நிலவெனிலும்,
இகல் தருவதுமில்லை,
இன்னல் செய்வதுமில்லை. – உன

5. தீங்கு தொடராதுன்னை,
தீமை படராதுன்மேல்;
தாங்குவார் தூதர் கோடி,
தாளிடறாதபடி. – உன

6. போக்கும் ஆசீர்வாதமாம்,
வரத்தும் ஆசீர்வாதமாம்;
காக்கைக் குஞ்சுகள் முதல்
கதறி நம்பிவிடுமே. – உன

7. துன்ப துயரத்திலும்
துக்க சமயத்திலும்,
இன்பமுறும் பொழுதும்
எல்லாம் உனக்கவரே. – உன

Exit mobile version