Site icon Treasure Hymns – Tamil

பாடல் 125 பாடல் வரிகள்

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 125 பாடல் வரிகள்

 

வேத புத்தகமே, வேத புத்தகமே,
வேத புத்தகமே, விலை பெற்ற செல்வம் நீயே.

1. பேதைகளின் ஞானமே, – பெரிய திரவியமே,
பாதைக்கு நல்தீபமே, – பாக்கியர் விரும்புந் தேனே! — வேத

2. என்னை எனக்குக் காட்டி – என் நிலைமையை மாற்றிப்,
பொன்னுலகத்தைக் காட்டிப் – போகும் வழி சொல்வாயே. — வேத

3. துன்பகாலம் ஆறுதல் – உன்னால்வரும் நிசமே
இன்பமாகுஞ் சாவென்றாய் – என்றும் நம்பின பேர்க்கே. — வேத

4. பன்னிரு மாதங்களும் – பறித்துண்ணலாம் உன்கனி;
உன்னைத் தியானிப்பவர் – உயர்கதி சேர்ந்திடுவார். — வேத

Exit mobile version