Site icon Treasure Hymns – Tamil

பாடல் 121 பாடல் வரிகள்

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 121 பாடல் வரிகள்

 

பஜித்திடும் சுவிசேட திருச்சபையோரே,
பரனை நினைத்துத் தினம் மகிழ்வீரே.

1. பஜித்திடும் சுவிசேஷசபைக்குள் வந்தோரே,
பரனருளால் ஜெயமடைந்தீரே,
துஜம் பிடித்தே ஜெயமெனப் புகல்வீரே,
தோத்ரசங்கீர்த்தனம் துத்யம் செய்வீரே. – பஜி

2. நித்ய சுவிசேடமே நேர்வழியாமே,
நிமலனருள் வழிபோவேமே.
சத்ய மறைபிடிக்கில் வழிதவறோமே,
தத்வ குணாகரன் தனைத்துதிப்போமே. – பஜி

3. திருக்குருசில் மரித்தோணது நேசம்,
தினம் மறவாதே, வைவிசுவாசம்.
இரக்க புண்ணியங்களால் எழில் நகர்வாசம்,
இனிபெறலாமென வெண்ணுதல் மோசம். – பஜி

Exit mobile version