Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 113 பாடல் வரிகள்
1. சூரியன் மறைந்து அந்தகாரம் சூழ்ந்தது,
சோர்ந்த என்தேகம் அயர்ந்துமே
இளைப்பாறப்போகுது தேவா
கிருபைகூர்ந்து காருமையா.
2. பகல்முழுவதும் பட்சமாய் என்னைப்பாது
காத்தீரே, சகல தீமையு மகல
வைத்தருள் நலமுந்தந்தீரே, சுவாமி
உன்றன் பாதம் பணிகிறேன்.
3. பாதகம் மிகப் புரிந்தேன் பரம
நாயகா, பாவி நானிந்த
நாளிலும் பல தீவினை
செய்தேனையா, கோபமின்றி
என் பாவம் பொறுத்திடுவாய்.
4. ராவில் வரும் மோசமொன்றும்
என்னைச் சேராமல்,
பேயின் சர்ப்பனை தீயசொப்பனம்
மனத்தில் நேராமல்,
நேயா நின்நல் தூதர் காவல்தா.
5. உற்றார் உறவினரு மென்னிஷ்டர்
நேசரும், இந்த இரவினில்
உந்த னடைக்கலந் தன்னிலே
தங்கிடவும், தாதா நீயே
தயை செய்திரங்குவாய்:
6. ஆத்துமம் சரீரம் எனக்கான
யாவையும் அப்பனுன் கையி
லொப்புவித்து நான் அயர்ந்து
தூங்குவேன் ஐயனே உன்
பொன்னடி சரணம்.
