Site icon Treasure Hymns – Tamil

பாடல் 105 பாடல் வரிகள்

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 105 பாடல் வரிகள்

 

வையகந்தன்னை நடுத்தீர்க்க இயேசு
வல்லவர் வருகிறார் திருமறைக்கேற்க.

பொய் யுலகோர்களின் கண்களும் பார்க்க,
பொற்பதி தனிற் பரன் சேயரைச் சேர்க்க! – வைய

1. வான்கள் மடமடப்போ டொழிந்திடவே,
மகிதலம் அதிர்ச்சியாய்த் தானடுங்கிடவே ,
பானுவும் மதி யுடு அனைத்து மங்கிடவே
பஞ்ச பூதியங்களுந் தானழிந்திடவே .-வைய

2. முக்கிய தூதநெக்காளமே தொனிக்க
முன் மரித்தொரெலாந் தாமெழுந்திருக்க
அக்கண முயிருள்ளோர் மறு உருத்தரிக்க,
ஆண்டவர் வருகிறார் ,பக்தர்கள் களிக்க – வைய

3. யாவரின் சிந்தை செய்கையும் வெளிபடற்கு
இரண்டு புத்தகங்களுந் திறந்த்தரவர்க்கு ப்
பூவுலகினிலவர் நடந்து வந்ததற்குப்
புண்ணியனளவுடன் பலனளிப்பதற்கு -வைய

4.அடைக்கலன் இயேசுவை அறிந்தவர் நாமம்
அழிந்திடாதவர்களின் வாழ்வது ஷேமம் ;
படைத்திடுவாயிந்தக் கனமுனை .ஷாமம்
பற்றிடக் கூடுமே திடுக்கெனவே, நம்

Exit mobile version