Site icon Treasure Hymns – Tamil

பாடல் 104 பாடல் வரிகள்

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 104 பாடல் வரிகள்

 

இயேசு ராஜா வருவார் இன்னும் கொஞ்சங் காலந்தான்
மோட்சலோகம் சேர்ந்திடுவோம்.

1. பாவத்தின் பலன் நரகம், ஓ
பாவி நடுங்கிடாயோ?
காண்ப தெல்லாம் அழியும்,
காணாத தல்லோ நித்தியம். -இயேசு

2. உலக இன்பம் நம்பாதே, அதன்
இச்சையாவும் ஒழியும்
உன்ஜீவன் போகும் நாளிலே
ஓர் காசும்கூட வராதே. -இயேசு

3. உன் காலமெல்லாம் போகுதே,
உலக மாய்கையிலே
ஓ, தேவ கோபம் வருமுன்
உன்மீட்பரண்டை வாராயோ? -இயேசு

4. தேவன்பின் வெள்ளம் ஓடுதே, கல்
வாரி மலை தனிலே
உன்பாவம் யாவும் நீங்கிப்போம்,
அதில் ஸ்நானம் செய்வதாலே. -இயேசு

5. மா பாவியான என்னையும் என்
நேசர் ஏற்றுக்கொண்டாரே
ஓ பாவி, நீயும் ஓடிவா,
தேவாசீர்வாதம் பெறுவாய்! -இயேசு

Exit mobile version