Site icon Treasure Hymns – Tamil

பாடல் 103 பாடல் வரிகள்

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 103 பாடல் வரிகள்

 

சாலேமின் ராசா, சங்கையின் ராசா
ஸ்வாமி வாருமேன் – இந்த
தாரணி மீதினில் ஆளுகை செய்திட
சடுதி வாருமேன்

1. சீக்கிரம் வருவோ மென்று ரைத்துப்போன
செல்வக் குமாரனே – இந்த
சீயோனின் மாதுகள் தேடித் திரிகின்ற சேதி கேளீரோ?

2. எட்டி எட்டி உம்மை
அண்ணாந்து பார்த்துக் கண்
பூத்துப் போகுதே;- நீர் சுட்டிக்
காட்டிப் போன வாக்குத்தத்தம்
நிறைவேறலாகுதே

3. நங்கை எருசலேம் பட்டினம்
உம்மை நாடித் தேடுதே ; – இந்த
நானிலத்திலுள்ள ஜீவ
பிராணிகள் தேடிவாடுதே

4. சாட்சியாக சுபவிசேஷம்
தாரணிமேவுதே; – உந்தன்
சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம்
தாவிக்கூவுதே

Exit mobile version