Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 102 பாடல் வரிகள்
1. அருள் ஏராளமாய்ப் பெய்யும் உறுதி வாக்கிதுவே
ஆறுதல் தேறுதல் செய்யும் சபையை உயிர்ப்பிக்குமே
அருள் ஏராளம் அருள் அவசியமே
அற்பமாய் சொற்பமாய் அல்ல திரளாய் பெய்யட்டுமே
2. அருள் ஏராளமாய்ப் பெய்யும் மேகமந்தாரமுண்டாம்
காடான நிலத்திலேயும் செழிப்பும் பூரிப்புமாம் – அருள்
3. அருள் ஏராளமாய்ப் பெய்யும் யேசு வந்தருளுமேன்
இங்குள்ள கூட்டத்திலேயும் கிரியை செய்தருளுமேன் – அருள்
4. அருள் ஏராளமாய்ப் பெய்யும் பொழியும் இக்கணமே
அருளின் மாரியைத் தாரும் ஜீவ தயாபரரே – அருள்
