Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 10 பாடல் வரிகள்
காலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரைக்
கருத்துடன் பாடிடுவேன்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் எனத்தூதர்
பாடிடும் தோணி கேட்குதே
1. கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும்
கிருபையாய் இரட்சிப்புமானார்
அஞ்சிடாமல் கலங்காமல் பயமின்றித் திகிலின்றி
அனுதினம் வாழ்ந்திடுவேன்
2. ஒன்றை நான் கேட்டேன் அதையே நாடுவேன்
என்றும் உம் மகிமையைக் காண
ஜீவனுள்ள நாளெல்லாம் உம் ஆலயத்தில் தங்குவதை
வாஞ்சித்து நாடிடுவேன்
3. எனக்கெதிராய் ஓர் பாளயமிறங்கி
என் மேல் ஓர் யுத்தம் வந்தாலும்
பயப்படேன் எதிராளி நிமித்தமாய்
செவ்வையான பாதையில் நடத்திடுவார்
4. எந்தன் முகத்தைத் தேடுங்கள் என்று
என் கர்த்தர் சொன்னதினாலே
அவர் முகத்தைத் தேடுவேனே கூப்பிடும் என் சத்தம் கேட்டு
தயவாகப் பதிலளிப்பார்
5. தகப்பனும் தாயும் கைவிட்டாலும் என்
கர்த்தர் என்னைச் சேர்த்து கொள்வார்
எந்தன் உள்ளம் இன்றுபோல திடமாகக் கர்த்தருக்கே
என்றென்றும் காத்திருக்கும்
6. எனக்காக யாவும் செய்து முடிப்பார்
என் கர்த்தர் வாக்கென்றும் மாறார்
தமக்கென்றும் பயந்திடும் பக்தர் யாவர்
விருப்பமும் தவறாமல் நிறைவேற்றுவார்