Site icon Treasure Hymns – Tamil

பாடல் 1 பாடல் வரிகள்

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 1 பாடல் வரிகள்

 

ஆத்துமமே என் முழு உள்ளமே – உன்
ஆண்டவரைத் தொழு தேத்து -இந்நாள் வரை
அன்பு வைத் தாதரித்த – உன்
ஆண்டவரைத் தொழுதேத்து

சரணங்கள்

1. போற்றிடும் வானோர், பூதலத்துள்ளோர்
சாற்றுதற் கரிய தன்மையுள்ள – ஆண்டவரைத்

2. தலை முறை தலை முறை தாங்கும் விநோத
உலக முன் தோன்றி ஒழியாத – ஆண்டவரைத்

3. தினம் தினம் உலகில் நீ செய் பலவான
வினை பொறுத் தருளும், மேலான – ஆண்டவரைத்

4. வாதை, நோய், துன்பம் மாற்றி, ஆனந்த
ஓதரும் தயைசெய் துயிர் தந்த – ஆண்டவரைத்

5. உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்,
முற்றும் கிருபையினால் முடி சூட்டும் – ஆண்டவரைத்

6. துதி மிகுந்தேறத் தோத்தரி தினமே,
இதயமே, உள்ளமே, என் மனமே – ஆண்டவரைத்

Exit mobile version